/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை ஆதரித்து அண்ணாகிராமத்தில் மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம்
/
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை ஆதரித்து அண்ணாகிராமத்தில் மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம்
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை ஆதரித்து அண்ணாகிராமத்தில் மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம்
தே.மு.தி.க., சிவக்கொழுந்துவை ஆதரித்து அண்ணாகிராமத்தில் மாஜி எம்.எல்.ஏ., பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 03:39 AM

பண்ருட்டி: கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் செய்தார்.
அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், தட்டாம்பாளையம், திராசு, மாளிகைமேடு, மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், பகண்டை, கொங்கராயனுார், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட 50 கிராமங்களில் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வராக பழனிசாமி இருந்தபோது, ஏழை மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்க 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினார். இதன் மூலம் 350 மாணவ, மாணவியர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம் எனும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி தந்தார்.
மேலும், அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லுாரிகள், 7 சட்டக் கல்லுாரிகள், 4 வேளாண் கல்லுாரிகள், 15 கலை அறிவியல் கல்லுாரிகளை திறந்து, கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றமடைய செய்தார்.
ஆனால் பொய் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சியில் பள்ளி, கல்லுாரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக விற்கின்றனர்.
எதிர்கால தமிழகத்தை, இந்தியாவை வழிநடத்தபோகும் மாணவ செல்வங்களை சீரழிக்கும் தி.மு.க., ஆட்சிக்கு பாடம் புகட்ட தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு முரசு சின்னத்தில் ஓட்டளியுங்கள்.
சொன்னதை செய்வோம் என்று கூறிய தி.மு.க., ஆட்சியாளர்கள், ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்றார்கள், செய்யவில்லை.
தி.மு.க., வின் 3 ஆண்டுகால ஆட்சியில் ஒரே ஒரு மருத்துவக் கல்லுாரி கூட திறக்கவில்லை. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துவிட்டனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுகடைகள் மூடுவோம் என கனிமொழி எம்.பி., கூறினார். செய்யவில்லை. எனவே, தேர்தலுக்காக எங்கிருந்தோ வந்த வேட்பாளர்களை தவிர்த்து, உள்ளூர் வேட்பாளர் சிவகொழுந்துக்கு, முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், நகராட்சி முன்னாள் சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர்கள் தேன்மொழி தேவநாதன், சுந்தரிமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாபுபுஷ்பராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

