/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொய் வாக்குறுதி தந்த தி.மு.க.,விற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
/
பொய் வாக்குறுதி தந்த தி.மு.க.,விற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
பொய் வாக்குறுதி தந்த தி.மு.க.,விற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
பொய் வாக்குறுதி தந்த தி.மு.க.,விற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; மாஜி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஏப் 10, 2024 07:41 AM

பண்ருட்டி, : கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, பண்ருட்டி தொகுதி, அண்ணாகிராமம் ஒன்றியம், அக்கடவல்லி கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2021 சட்சபை தேர்தலில், மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. கடந்த தேர்தலில் 'நீட்' தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்போம் என கூறினர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், காஸ் விலை ஏன் குறைக்கவில்லை என, கேட்டதற்கு, அது மத்திய அரசு வேலை என அந்தர் பல்டி அடித்தார்.
தற்போது லோக்சபா தேர்தலில், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65, சிலிண்டர் ரூ.500க்கும் தருவோம் என தமிழக முதல்வர் பொய் வாக்குறுதி அளித்துள்ளார்.
இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சி செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி 38 தொகுதியில் வெற்றி பெற்றது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகள் என்ன செய்தார்கள்.
கடலுார் தொகுதி எம்.பி.,யை யாராவது பார்த்திருக்கிறீர்களா? கடலுார் தொகுதிக்காக சிறு துரும்பை கூட அவர் கிள்ளி போட்டதில்லை.
இந்நிலையில், தற்போது தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் ஆரணியில் இருந்து வந்துள்ளார்.
பா.ஜ., கூட்டணி பா.ம.க., வேட்பாளர் சென்னையில் குடியிருப்பவர். இவர்களுக்கு ஓட்டு போட்டால் யாராவது அவர்களை போய் பார்க்க முடியுமா?
அ.தி.மு.க., அரசு தாலிக்கு தங்கம் திட்டம், மாணவ, மாணவியருக்கு லேப்டாப், விலையில்லா சைக்கிள், மகளிருக்கு இருசக்கர வாகனம், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, அம்மா பரிசு பெட்டகம் தந்தது. இவை அனைத்தையும் தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது.
எனவே இத்தேர்தலில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆதரவுடன், இங்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து நம் ஊர்காரர். எதையும் செய்து தரக்கூடியவர்.
மக்களோடு மக்களாக பழகுபவர். அவருக்கு முரசு சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர்கள் தேன்மொழி தேவநாதன், சுந்தரி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

