/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் சிக்கிய நால்வர் மீது டிராக்டர் மோதியதில் பலி
/
விபத்தில் சிக்கிய நால்வர் மீது டிராக்டர் மோதியதில் பலி
விபத்தில் சிக்கிய நால்வர் மீது டிராக்டர் மோதியதில் பலி
விபத்தில் சிக்கிய நால்வர் மீது டிராக்டர் மோதியதில் பலி
ADDED : மே 03, 2024 02:27 AM

தரங்கம்பாடி:கடலுார், பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர்கள் முகமது சஹின், 19, ஹரிகரன், 20, ஆகாஷ், 20. நண்பர்களான இவர்கள் மூவரும் ஹரிகரன் மாமாவிற்கு சொந்தமான கே.டி.எம்., பைக்கில் நாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கிருந்து நேற்று காலை 10:00 மணிக்கு மூவரும் பைக்கில் கடலுாருக்கு புறப்பட்டனர்; பைக்கை ஆகாஷ் ஓட்டினார்.
தரங்கம்பாடி மெயின் ரோட்டில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஸ்ரீதர், 48, ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. அதில் நிலைதடுமாறி, நான்கு பேரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் முகமது சஹின், ஹரிகரன், ஆகாஷ் ஆகியோர் மீது ஏறி இறங்கியது. அதில், மூவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த ஸ்ரீதரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து பொறையார் போலீசார் விசாரிக்கின்றனர்.