ADDED : ஜூலை 13, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில், இ.கே.சுரேஷ் கல்விக் குழுமம் மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை, இ.கே.சுரேஷ் கல்விக்குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவக் குழுவினர், பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் சிகிச்சை, குழந்தைகள், அறுவை சிகிச்சை, மகப்பேறு தொடர்பாக பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.