/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்டேட் பாங்கில் இலவச மருத்துவ முகாம்
/
ஸ்டேட் பாங்கில் இலவச மருத்துவ முகாம்
ADDED : மார் 07, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஸ்டேட் பாங்கில் மகளிர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை வங்கி மேலாளர் ரோஜாஷாஷூ துவக்கி வைத்தார். புதுச்சேரி அறுபடைவீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் அமுதா, பெண்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் கண்மணி மற்றும் மாணவிகளை வங்கி மேலாளர் ரோஜாஷாஷூ சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.