தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிரிக்கெட் வீரர்களுக்கு மே.,1ல் இலவச பயிற்சி

கிரிக்கெட் வீரர்களுக்கு மே.,1ல் இலவச பயிற்சி

கிரிக்கெட் வீரர்களுக்கு மே.,1ல் இலவச பயிற்சி


ADDED : ஏப் 11, 2024 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் மாவட்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மே மாதம் 1ம் தேதி முதல் கோடை கால கிரிக்கெட் இலவச பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து, மாவட்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் இலவச பயிற்சி முகாமை, மே மாதம் 1ம் தேதி முதல் துவங்கி 21ம் தேதி வரை நடத்துகிறது. தினமும் காலை 6:00 மணி முதல் 9:00 வரையிலும், மாலை 3:00 மணி முதல் 6:00 வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளிக்கிறார். கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறலாம். வீரர்கள் 19 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தல் வேண்டும். பயிற்சியின் போது வெள்ளை நிற உடை மற்றும் ஷூ கட்டாயம் அணிந்து வர வேண்டும்.

ஏற்பாடுகளை கடலுார் கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கூத்தரசன் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us