/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் நிலையத்தில் பழ வியாபாரிகள் தர்ணா
/
கடலுார் பஸ் நிலையத்தில் பழ வியாபாரிகள் தர்ணா
ADDED : மே 12, 2024 05:40 AM

கடலுார்: பஸ் நிலையத்தில் நடைபாதையில் இருந்து பழக்கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, வியாபரிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் பஸ் நிலையத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகளை அகற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மாநகராட்சி உதவி ஆணையர் சந்தானநாராயணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் அசோகன், பாஸ்கர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஜே.சி.பி., இயந்திரத்துடன் சென்றனர்.
பழக்கடைகளை அகற்ற பழ வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பழ வியாபாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.