/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வானமாதேவியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றம்; ஊராட்சி தலைவர் துரைராஜ் பெருமிதம்
/
வானமாதேவியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றம்; ஊராட்சி தலைவர் துரைராஜ் பெருமிதம்
வானமாதேவியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றம்; ஊராட்சி தலைவர் துரைராஜ் பெருமிதம்
வானமாதேவியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றம்; ஊராட்சி தலைவர் துரைராஜ் பெருமிதம்
ADDED : ஜூன் 29, 2024 05:57 AM

நடுவீரப்பட்டு : பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை தடையின்றி செய்து வருகிறேன் என வானமாதேவி ஊராட்சி தலைவர் துரைராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும், கூறியதாவது:
வானமாதேவி ஊராட்சியில் வானமாதேவி, பெத்தாங்குப்பம், கட்டாராச்சாவடி, சேர்க்காம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர் வசதி மற்றும் சிமென்ட், தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.
அமைச்சர் பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின் படி நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெத்தாங்குப்பத்தில், பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. புதியதாக கால்நடை மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது. துவக்கப் பள்ளிகளின் பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சேர்க்காம்பாளையத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. வானமாதேவி பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் சத்துணவு மையம் கட்டப்பட்டுள்ளது. அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
பெத்தாங்குப்பம், வானமாதேவி காலனியில் விளையாட்டு திடல் அமைக்க பணிகள் துவங்கப்பட உள்ளது.
வானமாதேவி பகுதியில் விவசாயிகள் நிலத்திற்குச் செல்லும் வழியில் 2.5 கி.மீ., துாரத்திற்கு வாய்க்கால் வெட்டவும், கட்டாரச்சாவடிக்கு புதிய போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கழிவுநீர் கால்வாய் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், சேர்கான்பாளையம் - கொடுக்கன்பாளையம் சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் அச்சாலையை அகலப்படுத்தவும், ஊராட்சி சுற்று பகுதிகளில் உள்ள கிராமங்களில் இணைக்கும் சாலைகளை புதிதாக போட அனுமதி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு துரைராஜ் கூறினார்.