/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு
/
மருந்து தொழிற்சாலையில் புகை மூட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 04, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவால், புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் முதுநகர் சிப்காட் வளாகத்தில், தனியார் மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் திடீரென புகைமூட்டம் வந்தது. இந்த புகை குடிகாடு-கடலுார், சிதம்பரம் சாலையில் பரவியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், தொழிற்சாலையில் இருந்த ஒரு ரசாயனம் கசிவானதால் புகைமூட்டம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.