/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 29, 2024 11:34 PM

திட்டக்குடி: ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் கோபி தலைமை தாங்கி பேசுகையில், விநாயகர் சிலை அமைப்பதற்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். சிலை 10அடிக்கு மேல் இருக்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட, இயற்கையான வண்ணக்கலவைகளை பயன்படுத்தி வர்ணம் பூசப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அசம்பாவிதம் எதுவும் நடக்காத வண்ணம் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்பது உட்பட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
ராமநத்தம், தொழுதுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

