/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா வாலிபர் கைது ஒரு கிலோ பறிமுதல்
/
கஞ்சா வாலிபர் கைது ஒரு கிலோ பறிமுதல்
ADDED : ஜூலை 29, 2024 05:27 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி அருகே கஞ்சா அதிகளவு விற்பனை ஆவதால் மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து.
விசாரணை செய்தனர். இதில் அவர் நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் மகன் பரத்குமார்,22; என்பது தெரியவந்தது.
பண்ருட்டி கலால் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய் தனர்.

