sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓராண்டில் குப்பை அகற்ற செலவு... ரூ.10 கோடி

/

ஓராண்டில் குப்பை அகற்ற செலவு... ரூ.10 கோடி

ஓராண்டில் குப்பை அகற்ற செலவு... ரூ.10 கோடி

ஓராண்டில் குப்பை அகற்ற செலவு... ரூ.10 கோடி


ADDED : ஜூலை 03, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என, குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகளை பசுமை உரக்குடிலுக்கு எடுத்துச்செல்லுதல், கடலுார் மாநகர தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் துாய்மைப்பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் 'சென்னை சிட்டி கிளீன்' என்ற நிறுவனத்தாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் சேர்த்து நாளொன்றுக்கு 55 டன் முதல் 60 டன் குப்பைகள் வரை சேகரமாகிறது. அவற்றை எடைபோட்ட பின் தரம்பிரித்து உரக்குடிலுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், கடந்த 2023 ஜூன் முதல், மே மாதம் 2024 வரையில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்காக, ஒரு டன் குப்பைகள் அகற்ற 4,355.40 ரூபாய் என்ற அடிப்படையில் பணி உத்தரவு வழங்கப்பட்டது.

பணிக்கான ஒப்பந்த காலம் 2024 மே மாதம் முடிவடைந்தது. அப்போதைக்கு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மாநகராட்சி அனுமதி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தலின் அடிப்படையில், பொது சுகாதார அவசர அவசியம் கருதி சிட்டி கிளீன் நிறுவனத்தாரின் ஒப்பந்த பணிக்காலம் ஜூன் 2024 மற்றும் ஜூலை 2024 ஆகிய இரண்டு மாதங்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், துப்புரவு பணி ஒப்பந்தம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி, துப்புறவு பணிக்கான மூன்று ஆண்டு கால ஒப்பந்த அறிக்கையில், 2ம் ஆண்டு நீட்டிப்பின்போது, முதல் ஆண்டில் வழங்கப்பட்ட ஒப்பந்த தொகையில் 10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிட்டி கிளீன் நிறுவனத்தாருக்கு 2ம் ஆண்டிற்கு ஒப்பந்த காலத்தை நீட்டித்து வழங்குவதற்காக முதல் ஆண்டில்வழங்கப்பட்ட தொகையைான ஒரு டன்னிற்கு 4355.40 ரூபாயை, 10 சதவீதம் உயர்த்தி 4,790 ரூபாயாக வழங்கப்பட வேண்டும்.

ஒரு நாளில் எத்தனை டன் சேகரமாகிறதோ அந்த அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்யப்படும்.

அதன்படி இந்த ஆண்டின் குப்பைகள் சேகரித்து அகற்றவதற்கு, உத்தேச செலவு 10.39 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us