/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பை இல்லாத மாநகரம் குடியிருப்போர் சங்கம் மனு
/
குப்பை இல்லாத மாநகரம் குடியிருப்போர் சங்கம் மனு
ADDED : செப் 02, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரை குப்பை இல்லாத மாநகரமாக மாற்ற வேண்டுமென, குடியிருப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கடலுார் மாநகரட்சி கமிஷனர் அனுவை அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வெங்கடேசன், சிறப்பு தலைவர் மருதவாணன், பொருளாளர் வெங்கட்ரமணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், குப்பைகள் இல்லாத மாநகரமாக கடலுாரை மாற்ற வேண்டும். மாடுகள், நாய்கள் சாலையில் சுற்றித் திரிவதை தடுக்க வேண்டும். கம்மியம்பேட்டைக்கு புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.