/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராட்சத குழாய் உடைப்பு; கடலுாரில் வீணாகிய குடிநீர்
/
ராட்சத குழாய் உடைப்பு; கடலுாரில் வீணாகிய குடிநீர்
ADDED : ஜூன் 10, 2024 01:16 AM

கடலுார் : கடலுாரில் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறி வீணாகியது.
கடலுார் செம்மண்டலம், கோண்டூர், சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கேப்பர் மலையில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் செம்மண்டலத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு கொண்டுவரப் படுகிறது. இங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ராட்சத குழாயில் கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று மேம்பாலத்தில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறியது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.