தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு

மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஜூன் 16, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2024 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ரங்கநாதன் ஜெகதாம்பாள் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் அன்வர்பாஷா (பொறுப்பு) தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்றார்.

என்.எஸ்.எஸ்., அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதல் மதிப்பெண் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ. 5,000 மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 பரிசுகளை, அறக்கட்டளை தலைவர் நடராஜன் வழங்கினார்.

விழாவில், ஆசிரியர்கள் மீரா, தமிழ்ச்செல்வி, முத்துக்குமரன், தணிகாசலம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us