/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோர்டியா பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
லட்சுமி சோர்டியா பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
லட்சுமி சோர்டியா பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
லட்சுமி சோர்டியா பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஆக 24, 2024 06:30 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோர்டியா பள்ளியில், இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா முன்னிலை வகித்தார். இதில், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு வகையான ஆயுள் காப்பீடு திட்டங்கள் குறித்தும், மருத்துவ காப்பீடு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பிரம்மகுமாரிகள் சங்கம் சார்பில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு ரக்ஷாபந்தன் கயிறு கட்டினர். பின், அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோர்டியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சித்ரா, உடற்கல்வி ஆசிரியர்கள் மைக்கேல் ராஜ், புஷ்பா செய்திருந்தனர்.

