/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குழு கூட்டம்
/
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : ஜூன் 22, 2024 05:50 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவசங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, தலைமை ஆசிரியர் சுமதி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் அருண் வரவேற்றார்.
கூட்டத்தில், பெண் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பெண் குழுந்தைகள் கருக்கலைப்பு சம்பவங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும், வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சத்துணவு பணியாளர் அனுசியா நன்றி கூறினார்.