/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் இருவர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி கர்ப்பம் இருவர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஜூலை 15, 2024 11:52 PM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிறுமி கர்ப்பமான நிலையில், தவிக்க விட்டு சென்ற காதல் கணவர் மற்றும் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் அடுத்துள்ள பெரியகுமட்டியை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் பாலமுருகன், 33; இவர் கடந்த ஆண்டு, குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
அதன் பின், இருவரும் புவனகிரியில், தனி வீடு எடுத்து 10 மாதம் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், கோவையில், பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, தகவல் அறிந்த கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கிருஷ்ணகுமாரி கொடுத்த புகாரில், சிதம்பரம் மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்த பாலமுருகன், சிறுமியின் தந்தை ராஜேந்திரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.