/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி விபசார வழக்கு ; பெண்ணுக்கு 'குண்டாஸ்'
/
சிறுமி விபசார வழக்கு ; பெண்ணுக்கு 'குண்டாஸ்'
ADDED : மார் 22, 2024 05:57 AM
கடலுார் : சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தத்தில் கடந்த ஜன., 27ம் தேதி, கடத்தி சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி 17 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த சேகர் மற்றும் 27 வயது பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 27 வயது பெண் இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அவரது செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராமின் பரிந்துரையை ஏற்று, அந்த பெண்ணை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த பெண், குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து, வேலுார் பெண்கள் தனி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சேகர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

