/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருவேறு பகுதியில் சிறுமிகள் கர்ப்பம்: 2 வாலிபர்கள் மீது 'போக்சோ' வழக்கு
/
இருவேறு பகுதியில் சிறுமிகள் கர்ப்பம்: 2 வாலிபர்கள் மீது 'போக்சோ' வழக்கு
இருவேறு பகுதியில் சிறுமிகள் கர்ப்பம்: 2 வாலிபர்கள் மீது 'போக்சோ' வழக்கு
இருவேறு பகுதியில் சிறுமிகள் கர்ப்பம்: 2 வாலிபர்கள் மீது 'போக்சோ' வழக்கு
ADDED : செப் 07, 2024 05:55 AM
விருத்தாசலம் பகுதியில் இரு வேறு இடங்களில் சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவடட்டம், விருத்தாசலம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் மகன் தனுஷ், 21; இவர், பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கிப் பழகினார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
விருத்தாசலம் காந்திநகர் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றபோது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை டாக்டர் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், தனுஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு வழக்கு
இதேபோல், விருத்தாசலம் அடுத்த இருசாளகுப்பம் சிவக்குமார் மகன் விஜய், 28; இவர், 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தார். அதில், அவர் 9 மாத கர்ப்பிணியானார். தற்போது புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்றபோது, சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.
மருத்துவமனை நிர்வாக அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் சென்று சிறுமியை மீட்டு, கடலுார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விஜய் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.