ADDED : ஆக 18, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சி, பஞ்சங்குப்பம் நடுநிலைப் பள்ளியில், சுதந்திர தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி தலைமை தாங்கி, பரிசு வழங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கோதை வரவேற்றார்.
ஆசிரியர் ஆனந்தராஜ், சசிரேகா, எஸ்தர் புளோரி, சாதானா, கிராம தலைவர் சக்திவேல், பரமசிவம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

