/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜி.கே., மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்
/
ஜி.கே., மெட்ரிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்
ADDED : மே 07, 2024 11:19 PM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் ஜி.கே., மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதித்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் ஜி.கே., மெட்ரிக் பள்ளியில், 170 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத சாதனை படைத்துள்ளனர். மாணவி பிரணவி 592 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார். ஸ்ரீ கோதைநாயகி, அபிநய தென்றல், வினோதினி ஆகியோர் 591 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் இரண்டாமிடம், மாணவி தர்ஷினி 590 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பள்ளியில் உயிரியல் பாடத்தில் 62 பேர், கணிதத்தில் 39, வேதியியலில் 28, இயற்பியலில் 22, கணினி அறிவியலில் 4, கணினி பயன்பாடு திட்ட பாடத்தில் 2, விலங்கியலில் 12, தாவரவியலில் 3, வணிகவியலில் இருவர் என, மொத்தம் 170 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 550க்கு மேல் 120 பேர் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கல்வி குழும தலைவர் குமாரராஜா பாராட்டி, பொன்னாடை போத்தினார். பள்ளி மேலாண் இயக்குனர் அருண், முதல்வர் தேவதாஸ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

