/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் ஞானகுரு வித்யாலயா பள்ளி சாதனை
/
குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் ஞானகுரு வித்யாலயா பள்ளி சாதனை
குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் ஞானகுரு வித்யாலயா பள்ளி சாதனை
குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் ஞானகுரு வித்யாலயா பள்ளி சாதனை
ADDED : செப் 05, 2024 04:02 AM

திட்டக்குடி : திட்டக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் ஞானகுரு வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் எறிபந்து, கைப்பந்து, இறகுபந்து, வளை பந்து மற்றும் தடகள போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்தனர்.
திட்டக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள், தொளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14 மற்றும் 17வயதுக்குட்பட்டோருக்கான எறிபந்து போட்டியில் வெற்றிபெற்றனர். ஆண்களுக்கான 14, 17 மற்றும் 19வயதுக்குட்பட்டோருக்கான பிரிவு கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றனர்.
14வயதுக்குட்பட்டோருக்கான இறகுபந்து இரட்டையர் பிரிவு, 17வயதுக்குட்பட்டோருக்கான வளைபந்து இரட்டையர் பிரிவு, 19வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். தடகளத்தில் ஆண்கள் பிரிவில் 14வயதுக்குட்பட்டோருக்கான குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றனர். 100மீ., ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், 19வயதுக்குட்டோருக்கான தட்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் தடகள போட்டியில், 14 மற்றும் 17வயதுக்குட்பட்டோருக்கான 200மீ.,ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர்ஓட்டப்பந்தயத்தில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்று மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் கோடி, தாளாளர் சிவகிருபா, முதல்வர் முத்துஅய்யாதுரை ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். நிர்வாக அலுவலர், உடற்கல்விஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.