ADDED : மே 27, 2024 05:50 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் கோவில்களில் ஞானசம்பந்தர் குருபூஜை விழா நடந்தது.
நடுவீரப்பட்டு கைலசாநாதர் கோவிலில் ஞானசம்மந்தர் குருபூஜை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு ஞானசம்மந்தர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 11:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
அதேபோல் சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் இரவு 7:00 மணிக்கு ஞானசம்பந்தர் குருபூஜை விழா நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
