/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்மன் சிலை திருட்டு மர்ம நபருக்கு வலை
/
அம்மன் சிலை திருட்டு மர்ம நபருக்கு வலை
ADDED : ஆக 16, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே கோவில் சிலையை நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம், அடுத்த கவரப்பட்டு பேச்சியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த 14ம் தேதி பூஜை செய்ய கோவிலுக்கு வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த இரண்டரை அடி உயரமுள்ள, 5,000 ரூபாய் மதிப்பிலான பேச்சிஅம்மன் பித்தளை சிலை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கிராம தலைவர் சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, சுவாமி சிலையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.