/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோல்டன் சிட்டி லயன் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
கோல்டன் சிட்டி லயன் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 30, 2024 11:22 PM

கடலுார் : கடலுாரில் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலுாரில் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு 50,000 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
முன்னாள் மாவட்ட ஆளுனர் ரத்தினசபாபதி புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தினார்.
மாவட்ட முதல் நிலை ஆளுனர் ராஜா சுப்ரமணியன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார். மாவட்ட உதவி ஆளுனர்-2 சாலை கனகதாரன் சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.
சங்கத் தலைவராக ஜெயச்சந்திரன், செயலாளராக சேதுராமன், பொருளாளராக விஜயன் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
விழாவில், உடனடி முன்னாள் தலைவர் பிரகாஷ், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், நிர்வாகிகள் மனோகரன், தங்கதுரை, ஆதிபெருமாள், சண்முகம், சேகர், கன்வென்ஷன் செயலாளர் சங்கர், திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.
சக்திபாபு தொகுத்து வழங்கினார்.