ADDED : செப் 08, 2024 06:17 AM

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புலிகரம்பலுார் அரசு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வீரமணிக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
திட்டக்குடி அடுத்த தி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி, 51. மங்களூர் ஒன்றியம், புலிகரம்பலுார் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார்.
19ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், பள்ளி கட்டமைப்பை வலுப்படுத்துதல், இணைய வழி கற்பித்தல் மற்றும் பல்வேறு சமூக மேம்பாட்டு பணியாற்றினார்.
அவரது பணியை பாராட்டி, தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில் நல்லாசிரியர் விருது மற்றும் பதக்கத்தை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார். விருது பெற்ற ஆசிரியர் வீரமணிக்கு சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.