/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை வஸ்து பயன்படுத்தும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்
/
போதை வஸ்து பயன்படுத்தும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்
போதை வஸ்து பயன்படுத்தும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்
போதை வஸ்து பயன்படுத்தும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்
ADDED : பிப் 26, 2025 05:02 AM
கடலுாரில் இருந்து விழுப்புரம் மார்க்கத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் ஊழியர்கள் போதை வஸ்துகள் பயன்படுத்துவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கடலுாரில் இருந்து விழுப்புரம் மார்க்கத்திற்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் அதிகளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், அரசு பஸ்களில் பணியில் இருக்கும்போது, சில டிரைவர், கண்டக்டர்கள் குட்கா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது, பயணிகளிடமும் போதை வஸ்துகள் இருக்கிறதா எனவும் வெளிப்படையாக கேட்கின்றனர்.
இதனால், பயணிகள் முகம் சுளித்து வருகின்றனர். மேலும், பணியில் இருக்கும்போது போதை வஸ்துகள் பயன்படுத்துவதால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. உதராணத்திற்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திண்டிவனம் அருகே அரசு பஸ் டிரைவர் குடிபோதையில், டீக்கடைக்குள் பஸ்சை ஓட்டிச்சென்றார். அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களின் இந்த அத்துமீறல் செயல் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், பஸ்களில் திடீரென ஆய்வு செய்து டிரைவர்கள், கண்டக்டர்களை சோதனை செய்ய வேண்டும். மேலும், போதை வஸ்து பயன்படுத்தும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.