/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பணியாளர் சங்கம் மனித சங்கிலி போராட்டம்
/
அரசு பணியாளர் சங்கம் மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 04, 2025 07:09 AM

கடலுார்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் தேவராஜ் வரவேற்றார். துணை தலைவர்கள் தெய்வசிகாமணி, அல்லிமுத்து, துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சரவணன், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி, மாநில செயலாளர் ஞானஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, கந்தன், பரமசிவம் கண்டன உரையாற்றினர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன. பாலமுருகன் நன்றி கூறினார்.