/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை
/
அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை
அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை
அரசு அருங்காட்சியகம் புனரமைப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வை
ADDED : மே 31, 2024 02:57 AM

கடலுார்: கடலுாரில் அரசு அருங்காட்சியகம் ரூ.49 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு வருவதை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
கடலுார் அரசு அருங்காட்சியம் பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.
இங்கு பழங்கால கற்சிலைகள், மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட அரிய பொருட்கள் போன்றவை அருங்காட்சியகத்தின் வெளியிலேயே ஆங்காங்கே போடப்பட்டு கிடந்தது.
அருங்காட்சியத்தின் உள்ளே வைப்பதற்கு போதியளவு இடவசதியில்லாமல் இருந்தது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தில் புதியதாக வைப்பதற்கு டைனோசர், முட்டை போன்றவை சென்னையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் வைப்பதற்காக ரூ.49 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா உடனிருந்தார்.