/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வரும் அரசு திட்டங்கள்
/
பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வரும் அரசு திட்டங்கள்
பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வரும் அரசு திட்டங்கள்
பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வரும் அரசு திட்டங்கள்
ADDED : மார் 11, 2025 05:47 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பஸ் நிலையத்தை அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆனால், பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகி வருகிறது. பஸ்கள் உள்ளே செல்லாமல் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து பாதிக்கிறது. தற்போது பஸ் நிலையத்தை திறந்து வைத்த ஸ்டாலின் முதல்வராக இருந்தும் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதேபோன்று, நெல்லிக்குப்பம் நகராட்சியில் பல கோடி ரூபாய் செலவில் 20 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இதில், ஒரு சில இடங்களில் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்தது. பல இடங்களில் திறக்கபடாமலே பாழாகி வருகிறது. அதேபோல் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கும் ஜெயலலிதா ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்பாதியில் சிமென்ட் களம் தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு நாள் கூட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படவில்லை.
தற்போது, அண்ணா நகர், முள்ளிகிராம்பட்டு உட்பட பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டி முடித்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத்தால் பல கோடி ரூபாய் மதிப்பில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகி வருகிறது.
கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு பயன்பாட்டுக்கு வராத திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

