ADDED : மார் 25, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி காவல் படை மாணவர்கள் பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் வேல்முருகன் மாணவர்களுக்கு தீயணைப்பு மீட்பு வண்டியின் செயல்பாடுகள் மற்றும் தீ விபத்தின் போது உபயோகப்படுத்தும் உபகரணங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
மேலும், மீட்பு பணிகளின்போது செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
கள பயணத்தில் பள்ளி ஆசிரியர்கள் சத்தியவதி, நித்யா, வைத்தியநாதன் ஆகியோர் மாணவர்களுடன் சென்றனர்.

