/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பம் சுற்றுவதில் அரசு பள்ளி மாணவர்கள் 'அசத்தல்'
/
சிலம்பம் சுற்றுவதில் அரசு பள்ளி மாணவர்கள் 'அசத்தல்'
சிலம்பம் சுற்றுவதில் அரசு பள்ளி மாணவர்கள் 'அசத்தல்'
சிலம்பம் சுற்றுவதில் அரசு பள்ளி மாணவர்கள் 'அசத்தல்'
ADDED : ஆக 01, 2024 06:39 AM

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் மோகித்ராஜ்,12; அதே பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் அளிக்கப்படும் சிலம்பம் பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்றார். 150 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், 35 மாணவர்கள் சிலம்பம் பயிற்சி பெறுகின்றனர். கடந்த மாதம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் சென்னை, வேலுார், கோவை, திருச்சி, கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம் போட்டி நடந்தது. மாநில அளவில் நடந்த இப்போட்டியில், மாணவர் மோகித்ராஜ் 12வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று, இரண்டாம் இடம் பிடித்தார். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை, ஆவட்டி பள்ளி தலைமையாசிரியை செல்வி, பயிற்சியாளர் கண்மணி, சமூகஆர்வலர்கள் விஜயகுமார், வேலுச்சாமி மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.