/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டதாரி ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
பட்டதாரி ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 12:22 AM

கடலுார்: கடலுார் சி.இ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர்கள் சேகர், திருநாவுக்கரசு, வேலழகன் முன்னிலை வகித்தனர். சட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் தெரசா கேத்தரின், ராஜசேகர் விளக்க உரையாற்றினர்.
மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், சிவக்குமார், பாரதிதாசன், அனிதா கண்டன உரையாற்றினர்.
ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும்.
ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.