/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.எஸ்.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
சி.எஸ்.எம்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 10, 2024 06:40 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் உள்ள டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக் குழுமம், சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, கல்விக்குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கல்விக்குழும தாளாளர் மற்றும் செயலர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார், புல முதன்மையர் கவிபாண்டியன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனிவேல் வரவேற்றார்.துணை முதல்வர் ஜேசுதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.
வேலுார் திருவள்ளுவர் பல்கலை., பதிவாளர் செந்தில் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2013 - 2023 வரை பயின்ற 500 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் துறைத் தலைவர்கள் கலைசெழியன், ரமேஷ்குமார், செல்வக்குமார், சத்யா, ஜேசுதாஸ், கஜேந்திரன், ஜான்சிராணி, ராஜலட்சுமி, மாலினி மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.