/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சலா பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
/
அருணாச்சலா பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
அருணாச்சலா பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
அருணாச்சலா பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
ADDED : மார் 29, 2024 05:43 AM

வடலுார்: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். பள்ளியின் தலைவர் பன்னீர்செல்வம், செயலர் சட்டநாதன் மழையர்களுக்கு பட்டங்கள் வழங்கி, வாழ்த்தி பேசினர். மழலையர் பிரிவு தலைமை ஆசிரியர் பானு மற்றும் வகுப்பு ஆசிரியர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கல்வி ஆலோசகர்கள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், இயக்குனர்கள் அரசு, வேலு, ராஜேந்திரன், குமார், பாலசுப்ரமணியம் ஆசிரியர்கள் அபிராமி, பாலு, எழிலரசி, பசுபதி, சதீஷ், சிவராஜ், ரவிச்சந்திரன், சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.