/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உரம் கள ஆய்வு
/
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உரம் கள ஆய்வு
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உரம் கள ஆய்வு
மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உரம் கள ஆய்வு
ADDED : ஆக 29, 2024 07:43 AM

கடலுார்: முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமான தக்கை பூண்டு கள ஆய்வு நடந்தது.
குமராட்சி வட்டாரத்தில், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உரமான தக்கை பூண்டு 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இத்திட்ட செயலாக்கத்தின் மூலம் சிறகிழந்தநல்லுார் கிராமத்தில், 17 ஏக்கர் பரப்பளவில் தக்கை பூண்டு விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்வேல் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 6 முதல் 8 டன் வரை பசுந்தாள் உரம் மண்ணிற்கு கிடைப்பதோடு, 25 கிலோ தழைச்சத்தும், 6 கிலோ மணிச்சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும் ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது எனவும், பசுந்தாள் உரத்தை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.
அப்போது, வேளாண் அலுவலர் சிந்துஜா, உதவி வேளாண் அலுவலர் பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

