/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று குறை தீர்வு முகாம்
/
கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று குறை தீர்வு முகாம்
கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று குறை தீர்வு முகாம்
கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று குறை தீர்வு முகாம்
ADDED : செப் 13, 2024 06:57 AM
கடலுார்: கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், இன்று பணியாளர் குறை தீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
கடலுார் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு;
கடலுார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (13ம் தேதி) காலை 10:30 மணியளவில் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் முகாம் நடக்கிறது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.
கூட்டத்தில் நேரடியாகவும் வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போது, பதிவேற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.
எனவே, கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், நிறுவனங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.