/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு; 24,272 பேர் எழுதினர்
/
மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு; 24,272 பேர் எழுதினர்
மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு; 24,272 பேர் எழுதினர்
மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு; 24,272 பேர் எழுதினர்
ADDED : செப் 15, 2024 07:01 AM

கடலுார்: மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்சி., குரூப் 2 தேர்வை, 110 மையங்களில் 24,272 பேர் எழுதினர். 8,711 பேர் தேர்வு எழுதவில்லை.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப, குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வை நேற்று நடத்தியது. கடலுார் மாவட்டத்தில் 33,050 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடலுார், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி ஆகிய இடங்களில் 110 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
கடலுாரில் செயின்ட் ஜோசப் கல்லுாரி, கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி, கிருஷ்ணசாமி இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்ட 7 மையங்களில் 9,282 பேர் தேர்வு எழுதினர். 3,462 தேர்வு ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் 110 தேர்வு மையங்களில் 24,272 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 8,711 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.
குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 8:00 மணி முதல் வரத்துவங்கினர். 9:00 மணி வரையில் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.