தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோஷ்டி மோதல்: 2 பேர் கைது

கோஷ்டி மோதல்: 2 பேர் கைது

கோஷ்டி மோதல்: 2 பேர் கைது


ADDED : மே 05, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார், : தேவனாம்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் விஜி, 30; சுந்தராஜ் என்கிற சுந்தர் 42; மீனவர்கள். இருவருக்கும் மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு விஜி, தம்பி வினோத், நண்பர் தினேஷ்குமார் மூவரும், தேவனாம்பட்டினம் மகத்துபட்டறை அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தராஜ், தேவனாம்பட்டினம் கலைச்செல்வன் என்கிற கபில் 20; சாய்கணேஷ் என்கிற சாய் 19; ஆனந்த், வாசன், புதுப்பாளையம் சாகிப் உசேன், வன்னியர்பாளையம் முருகேஷ் ஆகியோர் விஜியிடம் தகராறு செய்தனர். இதனால், இரு கோஷ்டிகளாக மாறி தாக்கிக் கொண்டதால் நள்ளிரவில் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த மோதலில் படுகாயம் அடைந்த விஜி, வினோத், தினேஷ்குமார் ஆகிய 4 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து சுந்தர், கபில் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 45 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us