/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நந்தனார் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி
/
நந்தனார் பள்ளியில் வழிகாட்டல் நிகழ்ச்சி
ADDED : ஏப் 29, 2024 04:27 AM

சிதம்பரம் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சிதம்பரம் நந்தனார் பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு நடந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலர் லதா வரவேற்றார், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் சுப்ரமணியன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, துணை ஆய்வாளர் வாழ்முனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

