sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலத்தில் இன்று வழிகாட்டி நிகழ்ச்சி

விருத்தாசலத்தில் இன்று வழிகாட்டி நிகழ்ச்சி

விருத்தாசலத்தில் இன்று வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : செப் 16, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 05:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், நான் முதல்வன் உயர்வுக்குப் படி வழிகாட்டி நிகழ்ச்சி, கல்வி கடன் முகாம், விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (16ம் தேதி) நடக்கிறது.

நிகழ்ச்சி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் உயர்கல்வி முக்கியத்துவம் குறித்த ஊக்குவித்தல், உங்கள் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தேர்வு செய்வது.

வங்கிக் கடன் மற்றும் அரசின் உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள், அரசு திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்த விபரங்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்குகின்றனர்.

மேலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடக்கிறது. ஒவ்வொரு கல்லுாரிக்கும், கல்லுாரி முதல்வர் கல்விக் கடன் வழங்குதல் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக செயல்படுவார். கல்விக் கடன் கோரும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/ students என்ற இணைய வழி மூலமாக விண்ணப்பித்து, சாதிச்சான்று, வருமானச் சான்று போன்ற ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.

மாணவர்கள் இணைய வழியில் உடனடியாக சான்றுகள் வழங்கும் வகையில் மாவட்ட மின்ஆளுமை, மற்றும் வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்படும். அதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் விருத்தாசலம் நான் முதல்வன் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us