/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது
/
நெய்வேலி ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது
ADDED : ஆக 28, 2024 05:53 AM

நெய்வேலி : நெய்வேலி ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெய்வேலி மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் முருகேசன் மகன் எலி (எ) அய்யப்பன், 24; ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளது.
இந்நிலையில், என்.எல்.சி., ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய வழக்கில் நெய்வேலி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, அய்யப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை, கடலுார் சிறையில் உள்ள ரவுடி அய்யப்பனிடம் நேற்று நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழங்கினர்.