ADDED : மே 04, 2024 06:52 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவாமூரில் திருநாவுக்கரசர் குருபூஜை விழா நேற்று நிறைவு பெற்றது.
பண்ருட்டி அடுத்த திருவாமூரில் சைவ குரவர்களில் முதன்மையான திருநாவுக்கரசர் பிறந்த ஊராகும். இங்கு சித்திரை மாதம் முன்னிட்டு திருநாவுக்கரசர் சுவாமிக்கு குருபூஜை விழா நேற்று நடந்தது. கடந்த 1 ம்தேதி சிவபூஜையுடன் விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் 2 ம்தேதி திருவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார். சூரியனார்கோவில் ஆதீன சிவாக்கர தேசிகர் சிறப்பு சொற்பொழிவும். மாலை 6:00 மணிக்கு அப்பர் அடிகளின் புகழுக்கு காரணம் தேவாராமா, உழவார பணியா தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு பகத்யாச ருத்ர ேஹாமம், மூலவர் திருநாவுக்கரசர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பக்தர்களுக்கு திருமுறைக்கலாநிதி பட்டம் வழங்கி கவுரவித்தார். சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் அருளாசி வழங்கினார்.