ADDED : ஆக 20, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பாசிக்குளத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ராயர் மகன் வினோத்குமார், 22; என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
600 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, வினோத்குமாரை கைது செய்தனர்.

