/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
/
குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 06, 2024 04:25 AM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் குட்கா பொருட்களை பதுக்கி விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார், கடந்த 18ம் தேதி பெ.பொன்னேரி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த வெளி மாநில காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெண்ணாடம், வள்ளியம்மை நகர் மோகன், 43; அமர் பிரதீத் சிங், 31; கிருஷ்ணாபுராம், 26; ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது.
புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மோகன் உட்பட மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன், தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதால், அவரின் இந்த நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, மோகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள மோகனிடம் நேற்று பெண்ணாடம் போலீசார் வழங்கினர்.