/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
/
குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மே 08, 2024 12:32 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அடுத்த அனுப்பூர் பாளையத்தை சேர்ந்தவர் முகமது காசிம் மகன் முகமது அப்துல்லா, 42; விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்தார்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், கடந்த 1ம் தேதி முகமது அப்துல்லா வீட்டில் அதிரெடி ரெய்டு நடத்தி, 23 கிலோ எடையுள்ள 24 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, முகமது அப்துல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில், கலெக்டர் அருண் தம்புராஜ், முகமது அப்துல்லாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
கடலுார் மத்திய சிறையில் உள்ள அவரிடம், இதற்கான உத்தரவை, இன்ஸ்பெக்டர் முருகேசன் வழங்கினார்.

