/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒன்றிய சேர்மன்களின் கார்கள் ஒப்படைப்பு
/
ஒன்றிய சேர்மன்களின் கார்கள் ஒப்படைப்பு
UPDATED : மார் 22, 2024 12:34 PM
ADDED : மார் 22, 2024 12:34 AM
பரங்கிப்பேட்டை : தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய சேர்மன்களின் ஸ்கார்பியோ கார்கள் கலெக்டர் அலுவலகத்தில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 எம்.எல்.ஏ.,க்களின் அலுவலகங்கள், நகராட்சி, ஒன்றிய மற்றும் பேரூராட்சி சேர்மன்களின் அலுவலகங்களை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய சேர்மன்களுக்கு வழங்கப்படடிருந்த ஸ்கார்பியோ கார்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கார்கள், தேர்தல் பணிக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

