/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி பஸ்நிலையத்தில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
/
பண்ருட்டி பஸ்நிலையத்தில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
பண்ருட்டி பஸ்நிலையத்தில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
பண்ருட்டி பஸ்நிலையத்தில் தவறவிட்ட பணம் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 10, 2024 05:56 AM

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் தவற விட்ட பணம் மற்றும் நகையை பண்ருட்டி போலீசார் மீட்டு உரியவரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல்.
இவரது மனைவி ஜோதி. கடந்த 7ம் தேதி பண்ருட்டியில் உள்ள உஜ்ஜீவன் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்டுக்கொண்டு பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார்.
அங்கு பஸ் ஏறும் போது கைப்பையில் வைத்திருந்த தனது 30 கிராம் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை தவறவிட்டு விட்டார்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்க வேல் ஆகியோர் சி.சி.டி., கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் நகை மற்றும் பணத்தை எடுத்து சென்ற வரிடம் இருந்து பணம் மற்றும் நகையை பெற்று ஜோதியிடம் நேற்று இன்ஸ்பெக்டர் கண்ணன் ஒப்படைத்தார்.