ADDED : ஆக 03, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
வடலூர், ஆக. 4-
பஸ்சில் ஹான்ஸ் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்
வடலுார் சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் நேற்று சபை பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, பஸ்சில் இருந்து நபர், பெரிய பையை சாதாரணமாக துாக்கிச் சென்றார். சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை பிடித்து அவர் கொண்டு சென்ற பையை பரிசோதித்ததில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 7.5 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.37,500 ஆகும்.
விசாரணையில், அவர் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர்,34; என்பதும், கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ராஜசேகரை கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த 7.5 கிலோ ஹான்சை பறிமுதல் செய்தனர்.
